திருப்பதி பக்தர்களுக்கு குட்நியூஸ்.. இனி காத்திருக்க தேவையில்லை..!
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதியில் இருக்கும் பெரிய பிரச்சனையே ஏழுமலையானை காண மணிக்கணக்கில் காத்திருப்பது தான். பக்தர்கள் கூட்டம் அதிகரித்தால், சில சமயங்களில் 24 மணி நேரம் வரைக்கும் பக்தர்கள் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையானை விரைவாக தரிசனம் செய்ய ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனைப்படி, கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டா ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் நித்ய அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதற்காக திருப்பதி தேவஸ்தானம் ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஜெகன் ஆட்சியில் திருமலையில் அவரது கட்சிக்காரர்கள் 12 பேருக்கு ஓட்டல்கள் ஒதுக்கப்பட்டன. இந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, இ-டெண்டர் மூலம் ஓட்டல்களை ஒதுக்கி உள்ளோம்.
ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன நேரத்தை மாற்றி உள்ளோம். காலையில் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு அன்று மாலை சுவாமி தரிசனம் கிடைத்து விடும். ஏழுமலையானை பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இதன் மூலம் ஏழுமலையானை 1 முதல் 2 மணி நேரத்துக்குள் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
ஏழுமலையான் தரிசனம், பிரசாத விற்பனை தொடர்பாக சைபர் குற்றங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க திருமலையில் சைபர் செக்யூரிட்டி லேப் தொடங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




