--- --:--:-- --

புதிய டிஜிபி நியமன விவகாரம் – வழக்கு தள்ளுபடி

5

புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்ற விதிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியிலான விவகாரத்தில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31ம் தேதி ஓய்வு பெறுகிறார்.

 

சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் தாமோதரன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி. புதிய டிஜிபி நியமனம், உச்ச நீதிமன்ற விதிகளுக்கு முரணாக இருந்தால், அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon