பிரதமரிடம் மனு அளித்த தமிழ்நாடு அரசு!
தமிழ்நாட்டுக்கான வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து பிரதமரிடம் மனு அளித்துள்ளது தமிழ்நாடு அரசு.
சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான ரூ.2,151 கோடியை உடனடியாக விடுவித்தல், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல், பிற நாடுகளில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்தல், தாம்பரம், செங்கல்பட்டு இடையே 4ஆவது ரயில் வழிதடத்திற்கு அனுமதி அளித்தல், சேலம் உருக்காலையின் மிகை நிலங்களை பாதுகாப்பு தொழில் பூங்காவிற்கு வழங்குதல் ஆகிய 5 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடியிடம் வழங்கினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




