--- --:--:-- --

இரவு நேரப் பணி – மாநகரக் காவல்துறை உத்தரவு பிறப்பிப்பு

3

சென்னையில் இரவு நேரப் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பல்வேறு உத்தரவுகளை மாநகரக் காவல்துறை பிறப்பித்துள்ளது. இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படாத வகையில் வாகனத் தணிக்கை நடக்க வேண்டும். ரோந்து வாகன போலீசார், போஸ்டர் ஒட்டுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 

ஒட்டப்படும் போஸ்டர்களுக்கு அந்தப் பகுதி இரவு நேர போலீசார்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். அண்ணா சாலை, கடற்கரை காமராஜர் சாலை உள்ளிட்ட எந்த சாலைகளிலும் பைக் ரேஸ் நடக்கக் கூடாது. பைக் ரேஸில் ஈடுபட்டு தப்பிப்போரை, அடுத்த செக்பாயிண்டில் தகவல் தெரிவித்து பிடித்து வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon