திருவாடானையில் அருள்மிகு சிநேகவல்லியம்பாள் ஆடிப்பூர திருவிழா குடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து கம்பீரமாக காட்சி அளிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அருள்மிகு சினேகவல்லி அம்பாள் உடனமர் அருள்மிகு ஆதரத்தினீஸ்வரர் சிவன் கோவில் 1435ம் பசலி ஆண்டு ஆடி பூர திருவிழா நடைபெற உள்ளது. முன்னதாக நேற்று அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கிய நிலையில் இன்று காலை கொடி ஏற்றத்துடன் விழா துவங்கியது.
முன்னதாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனை தொடர்ந்து கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது இன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் பல்வேறு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

15 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 9ஆம் நாள் திருவிழாவாக அம்பாள் எழுந்தளிய தேரோட்டம் நடைபெறும். அதனை தொடர்ந்து அம்பாள் தபசு, பன்னிரண்டாம் நாள் திருக்கல்யாணம் நடைபெறும். இந்நிகழ்வில் கோவில் நிர்வாகத்தினர் 22 1/2 நாட்டார் பெருமக்கள், பொதுமக்கள் . பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்
📱 Share on WhatsApp
𝕏 Share on X





