--- --:--:-- --

எம்.பி. கல்யாண சுந்தரத்தின் கட்சி பதவி பறிப்பு..!

3

ஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த எம்.பி கல்யாண சுந்தரத்தை அந்த பதவியில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்து எம்.பி கல்யாண சுந்தரம் அந்த பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்.

 

அவருக்கு பதிலாக எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார் என அறிவித்துள்ளார்.கல்யாண சுந்தரம் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சியில் பொறுப்புகள் மாற்றம், சிலரது பொறுப்புகள் பறிப்பு, நிர்வாகிகளின் செயல்பாடுகள் அடிப்படையில் பொறுப்புகள் மாற்றம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

 

இந்நிலையில் தான் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த கல்யாண சுந்தரம் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக எம்.எல்.ஏ சாக்கோட்டை க.அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon