2 நாள் பயணமாக இன்று திருவாரூர் செல்கிறார் முதலமைச்சர்!
2 நாள் பயணமாக இன்று திருவாரூக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலையில் ரோடு ஷோ மேற்கொள்கிறார். மாவட்ட வாரியாக பயணம் மேற்கொண்டு, அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, 2 நாள் பயணமாக திருவாரூருக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார். சென்னையிலிருந்து இன்று காலை விமானம் மூலம் திருச்சி செல்லும் அவர், அங்குள்ள ஜமால் முகமது கல்லூரி பவள விழாவில் கலந்துகொண்டு புதிய கட்டடத்தை திறந்துவைக்கிறார். இதனைத் தொடர்ந்து, திருவாரூர் செல்லும் முதலமைச்சர், கலைஞர் கோட்டத்தில் திமுக நிர்வாகிகளை மாலை 5 மணியளவில் சந்தித்துப் பேசுகிறார்.
மேலும், கலைஞர் கோட்டத்திலிருந்து பனகல் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக ரோடு ஷோ செல்கிறார். திருவாரூர்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையை அவர் திறந்துவைக்கிறார். திருவாரூரில் இரவு தங்கும் முதலமைச்சர், நாளை காலை நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்ப உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




