திருவாடானையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்..!
தமிழகத்தில் தேமுதிக மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் என நியமனம் செய்யப்பட்டு தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி திருவாடானை சட்டமன்ற தொகுதியில் திருவாடானையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக தனியார் மகாலில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இரமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையிலும் திருவாடானை ஒன்றிய கழக செயலாளர்கள் செங்கமடை பாலு, ரெகுநாதன் ஆகியோர் முன்னிலையிலும் இக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருவாடானை சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் ராமநாதன் , மாவட்ட பொருளாளர் கதிர்வேலன் , மாவட்ட மீனவரணி செயலாளர் சேரேஷ் ,மாவட்ட தொண்டரணி துணை செயலாளர் ரமேஷ் பாபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் மணிகண்டன், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் கோபிநாத் ஒன்றிய பொருளாளர் சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு திருவாடானை சட்டமன்ற தொகுதி வெற்றி வியூகம்,கேப்டன் பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது சம்பந்தமாகவும், கழக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வருகையின் போது சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது .
📱 Share on WhatsApp 𝕏 Share on X




