மகளிர் உரிமைத் தொகை.. முக்கிய விதிகளை தளர்த்திய அரசு..!
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் சேர கூடுதல் விதிவிலக்குகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் குடும்பத் தலைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணிக்கில் மாதம் ரூ.1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையாக வரவு வைக்கப்படுகிறது.
தமிழக அரசின் இந்த திட்டம் மகளிர் இடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதி இருந்தும் தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என பல பெண்கள் வேதனை தெரிவித்து இருந்தனர். இதையடுத்து மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக அரசு சட்டசபையில் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 ஆம் தேதியில் இருந்து உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் , கடந்த முறை விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவர்கள் என அனைவரும் இந்த முகாம் மூலமாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதனிடையே அண்மையில் இரண்டு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்த முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டார். திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 15 முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது.
அந்த முகாமில் மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்ட மகளிர் விண்ணப்பிக்கலாம். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான பெண்களுக்கு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரிலேயே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்பவர்களுக்கு 45 நாட்களுக்குள் முடிவு அறிவிக்கப்படும்.
இதானல் ஜூலை மாதம் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு உடனடியாக முடிவு அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரிலேயே ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதற்கிடையே, இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் பொருட்டு மகளிர் உரிமை தொகை திட்டத்தில் சேர கூடுதல் விதிவிலக்குகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
மகளிர் களிர் உரிமை தொகை திட்டத்தில் கூடுதல் விண்ணப்பங்கள் பெறும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் தான் கூடுதலாக இரண்டு விதிவிலக்குகளை இணைத்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.அதன்படி, அதன்படி நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்ப பெண்களும், பிற ஓய்வூதத் திட்டங்களை ஓய்வூதியம் பெறுவோரும் விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




