தடையை மீறி மயோனைஸ்..?
தமிழகத்தில் தடையை மீறி மயோனைஸ் பயன்படுத்துப்படுவதை தடுக்க குழு அமைத்து உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறி, அதன் பயன்பாட்டுக்கு தமிழ்நாடு அரசு அண்மையில் ஓராண்டு தடை விதித்தது.
எனினும், தந்தூரி, ஷவர்மா, பொரித்த சிப்ஸ்கள், பிரெஞ்சு ஃப்ரைஸ், பிரட் ஆம்லெட் உள்ளிட்ட உணவு வகைகளை விற்பனை செய்யும் சில கடைகள் மயோனைஸை தடையை மீறி பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தடுக்கும் விதமாக உணவு பாதுகாப்புத் துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அதன்படி, தடைசெய்யப்பட்ட மயோனைஸை பயன்படுத்தினால், உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின்படி கடையின் உரிமத்தை ரத்து செய்து அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது.உணவகங்களில் மயோனைஸ் உபயோகிக்கப்படுவதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை சார்பில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் உள்ளிட்ட 3 பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




