வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்குவங்க கடலோரப் பகுதிகளில் நேற்று மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது.
இது வடக்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் வழியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று லேசான மழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




