தாம்பரத்தில் ரயிலை ஓட்டிச் செல்ல முயன்ற இளைஞர்..!
தாம்பரம் ரயில்வே பணிமனை அருகே தண்டவாளத்தில் இன்று மின்சார ரயில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்பகுதிக்கு இன்று மது, கஞ்சா குடித்து விட்டு போதையில் வந்த வடமாநில இளைஞன், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரயிலை ஓட்டிச் செல்ல முயன்றான்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப்படையினர் வடமாநில இளைஞனை சுற்று வளைத்து பிடித்தனர். மேலும், ரயிலை ஓட்டிச் செல்ல மேற்கொண்ட முயற்சியையும் தடுத்து நிறுத்தினர். கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




