உப்பு விலை கடும் வீழ்ச்சி.. உற்பத்தியாளர்கள் கவலை
தூத்துக்குடியில் உப்பு விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. வழக்கமாக உப்பு உற்பத்தி சீசனில் ஒரு டன் உப்பு ₹3,500 முதல் ₹4,000 வரை விற்பனையாகும்.
ஆனால், குஜராத்தில் இருந்து அதிக அளவு உப்பு இறக்குமதியாவதால் உள்ளூர் உப்பு டன் ஒன்றுக்கு ₹2,000 முதல் ₹2,800 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் உள்ளூர் உப்பு உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




