உயிரைவிட கொண்டாட்டம் முக்கியமல்ல: ராகுல் காந்தி
பெங்களூருவில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசல் மனதை உடைத்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு உதவிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
உயிரை விட எந்தக் கொண்டாட்டமும் முக்கியமல்ல எனக் கூறிய ராகுல், பெங்களூரு மக்களுடன் தான் துணை நிற்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




