அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படாது: அமைச்சர்
தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். பேருந்து கட்டணம் உயர்வு என்ற செய்தி வெறும் வதந்தியே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீதிமன்ற உத்தரவுப்படியே தனியார் பேருந்துகளில் கட்டணம் உயர்த்துவதற்கு மக்களிடம் கருத்து கேட்பதாகவும் அமைச்சர் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




