திருவாடானை அருகே புனிதர் தூய அன்னை தெரசா ஆலயம் திருப்பலி நடைபெற்றது.அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு முன்பாகவே இந்த ஆலயம் 2005ம் வருடம் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா ஆண்டாவூரணி அருகே மணவாளன்வயல் கிராமம் உள்ளது.இங்கு புனிதர் அன்னை தெரசாவிற்கு ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு முன்பாகவே 2005 ம் வருடம் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே அன்னை தெரசாவிற்கான முதல் ஆலயம் என்ற பெருமை பெற்ற ஆலயம் ஆகும்.
கடந்த மே21ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கி சிறப்பு திருபலி பங்கு தந்தை பாஸ்டின் தலைமையில் நடைபெற்றது. இதில் உதவி பங்கு தந்தை பாஸ்டின் பாரதி மற்றும் அருட் தந்தையர் ஜெயசீலன் திருபலியில் கலந்து கொண்டனர். திருப்பலியானது நாட்டில் விவசாயம் செழிக்க வேண்டும், இல்லாதவர்களுக்கு உதவிட வேண்டும் நல்ல மழை பொழிய வேண்டும் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என திருப்பலி நடத்தினார்.
இந்த ஆலயத்திற்கு சுற்றுவட்ட கிராமமக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள். திருப்பலியில் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் இன்புற்று வாழ ஒப்புக்கொடுத்தார்கள். இறுதியில் அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ இறைமக்களுக்கு அப்பம் வழங்கப்பட்டது.