பள்ளிகள் திறப்பு: ஸ்பெஷல் பஸ்கள் இயக்க திட்டம்..!

கோடை விடுமுறை முடிந்து வரும் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், 2,000 சிறப்பு பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.

 

இந்த பஸ்கள் எந்தெந்த பகுதிகளில் இயக்கம், முன்பதிவு, கட்டண விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் மே 31, ஜூன் 1-ம் தேதிகளில் இந்த கூடுதல் பஸ்கள் இயக்கப்படவுள்ளதாகவும் TNSTC அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்தாண்டு பயணிகளின் சிரமத்தைப் போக்க 1500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.