கல்வி நிதி ஒதுக்காதது ஏன் – மத்திய அரசு விளக்கம்
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், பின்தங்கிய மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்கக் கோரி மனுவில், “தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை மத்திய அரசு ஒதுக்காதது ஏன்?” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், ‘புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழ்நாடு அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை’ மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என்பது மத்திய அரசின் பெரியண்ணன் மனப்பான்மை காட்டுகிறது என்று தமிழ்நாடு அரசு தரப்பு வாதிடப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




