நடிகை தமன்னா நடிக்கப்போகும் விளம்பரத்திற்கு எதிர்ப்பு..!

டிகைகள் பட வாய்ப்புகள் வருகிறதா என பார்க்கிறார்கள், இல்லையென்றால் வெப் சீரியஸ் பக்கம் சென்று விடுகிறார்கள். அதற்கு ஏற்ப படங்களை தாண்டி ஒவ்வொரு வாரமும் வெப் சீரியஸ் அதிகம் வெளியாகின்றன.

 

நடிகை தமன்னாவும் அப்படி தான், கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்துக் கொண்டு வெப் சீரியஸ்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நடிகை தமன்னா சமீபத்தில் ஒரு சோப் விளம்பரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

 

கர்நாடக அசின் மைசூர் சாண்டல் சோப் விளம்பரத் தூதராக நடிகை தமன்னா நியமனம் ஆகியுள்ளார், அவருக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ. 6.2 கோடி சம்பளம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாம். கர்நாடகாலில் இல்லாத நடிகர்களா வெளிமாநிலத்தவரை ஏன் இந்த விளம்பரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என கர்நாடக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க சோப்பை கர்நாடகாவிற்கு அப்பாலும் கொண்டு செல்லவே இந்த முடிவு என அரசு தரப்பில் கூறியுள்ளனர்