--- --:--:-- --

இனியும் டார்ச்சர் கொடுத்தால் தீக்குளிக்கும் நிலைமை தான் – ஜி.பி.முத்து

2

இனியும் டார்ச்சர் கொடுத்தால் தீக்குளிக்கும் நிலைமை தான் யூடியூப் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து பரபரப்பு புகார் அளித்திருக்கிறார். யூடியூப் மூலம் பிரபலமானவர் ஜி.பி.முத்து, பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமடைந்தார்.

 

இதனைத்தொடர்ந்து சில படங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பெருமாள்புரத்தில் வசித்து வரும் ஜிபி முத்து, அங்குள்ள சிலரின் ஆக்கிரமிப்பால் கீழ்த்தெரு என்கிற பகுதியே காணாமல் போனதாக தெரிவித்துள்ளார். கோயிலுக்கு சொந்தமான இடத்தை கடந்த 20 ஆண்டுகளில் தனி நபர்கள் முழுவதுமாக ஆக்கிரமித்து சிட்டிசன் படத்தில் வருவது போல் தெருவையே காணாமல் போன நிலைக்கு கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

 

ஜி.பி.முத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், “பெருமாள்புரத்தில் கீழ தெரு என்று ஒரு தெரு இருந்தது. மேலும் ஒரு இடம் முழுக்க அரசு புறம்போக்கு பாதையாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வருவாய் துறை ஆவணங்களில் உள்ளது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் சிட்டிசன் திரைபடத்தில் வரும் அத்திப்பட்டு கிராமம் காணாமல் போனது போன்று பெருமாள்புரத்தில் கீழத்தெரு என்று ஒரு தெரு இருந்தது தெரியாமல் அந்த தெரு காணாமல் போய்விட்டது.

 

அந்த தெரு இருந்த இடம் முழுக்க பல்வேறு தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் செல்லும் பாதையும் அடைக்கபட்டு உள்ளது.” என்று கூறியிருக்கிறார்.இது தொடர்பாக அளித்த பேட்டியில், “கோயில் சொத்தை விற்க யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால் இங்கு கோயில் சொத்தை விற்றுள்ளனர். அதோடு எனக்குள்ள சொந்த பாதையையும் அடைக்கிறார்கள். ஒரு தனிப்பட்ட நபர் தனது சொந்த பகை காரணமாக அவரின் குடும்பத்தோடு சேர்ந்து அராஜகம் செய்கிறார்.” என்று ஜிபி முத்து கூறியிருக்கிறார்.

 

மேலும், தனிநபரால் தனக்கும் குடும்பத்திற்கும் தொடர் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் குடும்பத்தினரை தகாத வார்த்தையில் வசைபாடுவதாகவும் கூறியுள்ளார். புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தீக்குளிப்பேன் என்றும் ஜிபி முத்து கூறினார். ‘குடும்பத்தோடு வந்துள்ளேன். இனியும் பிரச்சினை தீர்க்கப்படாமல் டார்ச்சர் கொடுத்தால் தீக்குளிக்கும் நிலைமை தான் வரும்” என்று தெரிவித்திருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon