--- --:--:-- --

பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீர் கூட செல்லாது : ஜல்சக்தி அமைச்சர் உறுதி!

4

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை காலவரையின்றி நிறுத்தி வைக்கும் முடிவை இந்தியா மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தி உள்ளது. சிந்து நதியிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லாம் பார்த்துக் கொள்வோம் என்று ஜல்சக்தி அமைச்சர் பாட்டீல் கூறினார்.

 

காஷ்மீரின் பகல்காமில் ஏப். 22 சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு மாநில சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்தனர். இன்னும் பல பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு லக்சர் இ-தொய்பாவின் துணை அமைப்பான The Resistance Front பொறுப்பேற்றுள்ளது. இந்த பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானியர்களுடன் தொடர்பிருக்கும் என்பதால் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. 1960-ம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

இது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிந்து நதி நீரை நிறுத்துவதன் மூலம் பாகிஸ்தானுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனலாம். இந்திய நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்குள் தண்ணீா் பாய்வதைத் தடுப்பதற்கான உத்திகளை வகுக்க, டெல்லியில் உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் உயா்நிலை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய ஜல்ஜக்தி அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது: இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீா்கூட செல்லாத வகையில் 3 விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன்படி குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்குள் தண்ணீா் பாய்வதைத் தடுக்க இந்தியாவில் விரைவில் நதிகளை தூா்வாரி, நீரை திசைதிருப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாட்டீல் கூறினாா்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon