--- --:--:-- --

அதிமுக எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி விருந்து.. செங்கோட்டையன் புறக்கணிப்பு..!

2

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்தில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்களுக்கு சைவ, அசைவ உணவுகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருந்தளித்தார். பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலை அதிமுக எதிர்கொள்ள உள்ளது.

 

இந்நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி இரவு விருந்து கொடுத்தார். இந்த விருந்தில், மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், மட்டன் சுக்கா, முட்டை, இறால் தொக்கு ஆகிய 7 வகையான அசைவ உணவுகளும், இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, சாதம், சாம்பார், ரசம், பொரியல், அவியல் என சைவ உணவுகளும் இடம் பெற்றிருந்தன.

 

இந்த இரவு விருந்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் ஹுசைன், மூத்த தலைவர்கள் பொன்னையன், தம்பிதுரை, நத்தம் விஸ்வநாதன், முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி, வளர்மதி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் எம்பிக்களும் பங்கேற்றனர்.

 

பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் அமர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் உணவருந்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon