புதுச்சேரி அ.தி.மு.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!
புதுச்சேரி பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 4 மாத காலமாகியும் திறக்கப்படாத நிலையில், பேருந்து நிலையத்தை உடனே திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில், மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் தற்காலிக பேருந்து நிலையம் எதிரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் பேசியதாவது: மக்களின் வரிப் பணத்தின் மூலம் கட்டப்படும் திட்டப்பணிகள் காலத்தோடு கட்டி முடிப்பதும், கட்டப்பட்ட பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வருவதும் அரசு அதிகாரிகளின் கடமையாகும்.
எந்த ஒரு கட்டுமான பணிகளும் காலத்தோடு முடிக்கப்படவில்லை என்றால் அப்பணி முடிய கூடுதல் செலவுகளும், கட்டிமுடிக்கப்பட்ட திட்ட பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டுவரவில்லை என்றால் நாளடைவில் பயனற்று போகும் சூழ்நிலை ஏற்படும். அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் மக்களின் நலனுக்காக கட்டிமுடிக்கப்பட்ட பல்வேறு அரசு கட்டிடங்கள் காலத்தோடு திறக்கப்படாமல் வீணாகி போய் வருகிறது.
உண்மை நிலையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உணர்ந்த உடனடியாக சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளை அழைத்து பேசி கட்டிமுடிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு இந்த மாதத்திற்குள் கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தனிப்பட்ட அரசியல் செல்வாக்கு உள்ள நபர்களின் விருப்பு வெறுப்புகளினால் இந்த பேருந்து நிலையம் திறக்கப்படாமல் உள்ளது வருத்தம் அளிக்க கூடிய விஷயமாகும் என அவர் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




