தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்
நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மீனவர்களை தாக்கிவிட்டு ₹50,000 மதிப்புள்ள மீன்பிடி வலை உள்ளிட்ட பொருட்களை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த 4 மீனவர்கள் வேதாரண்யம் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




