பிரதமரை சந்திக்கிறார் ஓபிஎஸ்..!
பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் ஒருபுறம் அரசியல் ரீதியாக காய் நகர்த்தி வரும் நிலையில், வரும் 6ஆம் தேதி தமிழகம் வரும் மோடியை சந்திக்க, ஓபிஎஸ்-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது, 2026 சட்டமன்றத் தேர்தல், அதிமுக ஒருங்கிணைப்பு, கூட்டணி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்டவற்றை ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




