--- --:--:-- --

கோவை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு..!

4

கோவை, டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகத்தில் விக்டோரியா ஹாலில் சாதாரண மாமன்றக் கூட்டம், மேயர் ரங்கநாயகி தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். கூட்டம் தொடங்கியதும் தி.மு.க கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், ஆண்டுக்கு 6% உயர்வு என்பதை கைவிட வேண்டும் எனவும் மேயரிடம் மனு அளித்தனர்.

 

மேலும், திருப்பூர் மற்றும் ஈரோடு மாநகராட்சிகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் போலவே கோவையிலும் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர்.இதற்குப் பதிலளித்த மேயர் ரங்கநாயகி, 6% வரி உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு துறை அமைச்சருக்கு மாநகராட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டு உள்ளது. மேலும், அமைச்சரை நேரடியாகச் சந்தித்து கடிதம் வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

 

இதனிடையே, அ.தி.மு.க கவுன்சிலர்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வெளிநடப்பு செய்தனர். அவர்களின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கப்படாததால், அவர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க கவுன்சிலர்களின் வெளிநடப்பு, கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்த வெளிநடப்பு குறித்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கோவை மாநகராட்சி வரலாற்றையே இன்று முக்கியமான நாள். இதுபோன்ற கூட்டத்தை எந்த மாநகராட்சியும் நடத்தி இருக்காது. காலையில் ஒரு கூட்டம் அதிக வேலையில் பட்ஜெட், இதுபோன்று எங்காவது நடக்குமா,? அப்படி ஒரு அநியாயத்தை கோவை மாநகராட்சி செய்து கொண்டு இருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon