அப்பா, மகளை சுட்டுக் கொன்று, இளைஞர் தற்கொலை..!

பிஹார் ஆரா ரயில் நிலையத்தில் நடந்த கொலைச் சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை, மகள் இருவரையும் சுட்டுக் கொன்றுவிட்டு, இளைஞர் ஒருவர் அங்கேயே தன்னையும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

பிளாட்பாரத்தில் மூவர் உடலும் விழுந்து கிடப்பது பார்க்கவே பரிதாபமாக உள்ளது. இந்த சம்பவத்துக்கு காதல் பின்னணி இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் புறக்கணிக்க முடியாது என்கிறது போலீஸ்.