--- --:--:-- --

தமிழகத்தில் மகளிருக்கு பேருந்தில் மற்றொரு கட்டணமில்லா சேவை அறிவிப்பு..!

7

நகர மற்றும் புறநகர் பேருந்துகளில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் சுமைகளை மேலும், சுமைகளை பேருந்துகளில் ஏற்றி, இறக்குவதற்காக, போதுமான நேரத்தை வழங்கி பேருந்துகளை நிறுத்தி இயக்க வேண்டுமெனவும், அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது எனவும், சகபயணிகளைப் பாதிக்கும் ஈரமான சுமைகளை அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். பயணிகள் இல்லாத சுமைகள் தனியாக பேருந்தில் அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.கட்டணமின்றி எடுத்துச் செல்ல போக்குவரத்துத்துறை அனுமதி அளித்துள்ளது.

 

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுய உதவிக்குழு உறுப்பினர்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில், ஏசி பேருந்து நீங்கலாக அனைத்து நகரப் பேருந்துகள் மற்றும் சாதாரண கட்டண புறநகர் பேருந்துகளிலும் சுய உதவிக்குழு பெண் பயணிகள் 25 கிலோ வரையிலான சுமைகளை 100 கிலோ மீட்டர் வரை கட்டணமில்லாமல் எடுத்து செல்லலாம் என அறிவித்துள்ளார்.

 

அதன்படி, சுய உதவிக்குழு பெண் பயணிகள் சுமைகளை கட்டணமில்லாமல் எடுத்து செல்ல “கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு” நடத்துநர் வழங்க வேண்டுமெனவும், பேருந்து ஒட்டுநர் மற்றும் நடத்துநர்கள் சுய உதவிக்குழு பெண் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon