--- --:--:-- --

சென்னையில் இன்று மின்சார ரயில் சேவைகள் ரத்து..!

1

சென்னையில் இன்று கடற்கரை – கோடம்பாக்கம் இடையே புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

 

சென்னையில் எழும்பூர் முதல் கடற்கரை இடையே நான்காம் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. புதிய தண்டவாளம் அமைக்கும் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.கடற்கரை – கோடாம்பாக்கம் இடையே புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக இயங்காது எனவும்,கோடாம்பாக்கம் – தாம்பரம் 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காலை ஐந்து மணி பத்து நிமிடங்கள் முதல் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மாலை நான்கு மணி பத்து நிமிடங்களுக்குப் பிறகு வழக்கமான ரயில் சேவைகள் தொடரும் என கூறப்பட்டுள்ளது.மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் செல்லும் புறநகர் ரயில்கள் தாம்பரம் இருந்தும், மறுமார்க்கத்தில் தாம்பரம் வரையும் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

11 மணி நேரத்திற்கு புறநகர் ரயில் சேவை பாதிக்கப்படுவதால், பயணிகள் வசதிக்காக 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon