--- --:--:-- --

அமைச்சர் பொன்முடி வரும் 19-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு..!

2

ட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் பொன்முடி, வரும் 19-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006 முதல் 2011ம் ஆண்டு வரையான திமுக ஆட்சியின்போது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

 

இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி, கே.எஸ்.ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை கடந்த 2023-ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்நிலையில், தற்போது அமலாக்கத்துறை சார்பாக கூடுதல் குற்றப்பத்திரிகை மற்றும் 26 கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 

அதில் அமைச்சர் பொன்முடி அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இதையடுத்து கூடுதல் குற்றப்பத்திரிகையில் உள்ள அனைவரும் வரும் 19-ஆம் தேதி ஆஜராக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon