மனு அளிக்க சென்ற பெண்கள் குழுவுக்குள் வாக்குவாதம்..!
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே 28 ஆண்டுகளை கடந்தும் பட்டா வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பெண்கள் தங்களுக்குள்ளேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 1996 இல் 59 பேருக்கு பட்டா வழங்கப்பட்ட நிலையில் இதுவரை அதனை அதிகாரிகள் அளவீடு செய்து பட்டா வழங்காததாக கூறப்படுகிறது. இது குறித்து மன அளிக்க ஆட்சியரகம் சென்ற பெண்கள் பட்டா குறித்து தங்களுக்குள்ளே வாக்குவாதம் செய்து திட்டிக் கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





