பெங்களூரில் வாட்டி வதைக்கும் கோடை வெயில்..!
இந்த கோடைக்காலம் என்பது கர்நாடகாவின் வடக்கு, தெற்கு என இரண்டு பகுதிகளிலும் அளவிற்கு அதிகமான வானிலை மாற்றங்களை பார்க்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதுதவிர கடலோர கர்நாடகா மற்றும் மால்நாட்டில் 50 முதல் 60 சதவீதம் அதிகமாக கோடை மழை பெய்யப் போகிறது. பெங்களூரு உள்ளிட்ட உட்புற மாவட்டங்களில் 30 முதல் 40 சதவீத அளவிற்கு அதிக மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.
இதன் காரணமாக தெற்கு உட்புற கர்நாடகாவில் வானிலை இயல்பாக இருக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் பகல் நேரங்களில் வெப்பம் அதிகமாக தான் இருக்கும். வடகிழக்கு கர்நாடகாவில் நடப்பு மார்ச் மாதத்தில் 43 முதல் 45 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும்.
ஏப்ரல், மே மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறைந்து சீரான நிலையில் பதிவாகும். எனவே அடுத்த மூன்று மாதங்களை சமாளிக்க சில அறிவுறுத்தல்களை வல்லுநர்கள் வழங்கியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




