பாஜகவிற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி..!
மக்களவைத் தொகுதி மறுவரை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசியலாகப் பார்க்கக் கூடாது என்று பாஜகவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
நாகப்பட்டினம் அருகே புத்தூரில் திமுக மாவட்டச் செயலாளர் கவுதமன் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், மும்மொழிக் கொள்கையை கட்டாயப்படுத்தி கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் உரிமையை பறிக்க முயற்சி நடைபெறுவதாகவும் கவலை தெரிவித்தார்.இது தொடர்பாக நாளை மறுநாள் நடைபெற உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசியலாக பார்க்கமால், தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
அளவான குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என இனி கூறமாட்டோம் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.அதன்பின், நாகை அவுரி திடலில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டார். அங்கு 105 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




