--- --:--:-- --

பிளஸ் டூ பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது..!

4

12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை மொத்தம் 8,21,057 பேர் எழுத உள்ளனர். 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

தேர்வை கண்காணிக்க ஒவ்வொரு நாளும் 45,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு முறைகேடுகளை தடுக்க நான்காயிரத்து எண்ணூற்றுக்கும் மேற்பட்ட பறக்கும் படை தேர்வு பணியின் பொழுது ஈடுபட உள்ளனர். தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து செல்வதற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

ஆசிரியர்களும் தேர்வறையில் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெற உள்ள பள்ளிகளில் அனைத்து முன்னேற்பாடுகளும் தமிழ் தயார் நிலையில் இருப்பதாக அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon