--- --:--:-- --

தேனியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு..!

1

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மதுராபுரியில் அதிமுக சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திரளான அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

 

அதிமுகவில் தான்தான் சீனியர் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில், 1989ஆம் ஆண்டிலேயே தான் சட்டமன்ற உறுப்பினர் என்றும், 2001ஆம் ஆண்டில் தான் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்ற உறுப்பினரானார் என்றும் தெரிவித்தார். இதனால் அவருக்கு முன்பாகவே எம்.எல்.ஏவான தான் தான் சீனியர் என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதில் அளித்தார்.

 

கட்சியை விட்டுச் செல்ல வேண்டாம் என எவ்வளவோ கெஞ்சியும் ஓ.பன்னீர்செல்வம் கேட்கவில்லை எனவும், தற்போது தங்கள் மீது பழிபோடுவதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். மேலும் அதிமுக மூழ்குகின்ற கப்பல் இல்லை, கரை சேர்கின்ற கப்பல் என தெரிவித்தார்.

 

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தங்களுக்கு திமுகவைத் தவிர வேறு எந்த கட்சியும் எதிரி அல்ல என குறிப்பிட்டது கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது. இருமொழிக் கொள்கை தான் அதிமுகவின் நிலைப்பாடு என்றும், பாஜகவை பார்த்து நடுங்குபவர்கள் நாங்கள் அல்ல என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

 

மேலும் திமுக அரசு 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாகவும் இபிஎஸ் விமர்சித்தார்.மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon