நடுரோட்டில் 32 முறை தந்தையை குத்தி கொன்ற மகன்..!
ஹைதராபாத்தில் நடுரோட்டில் தந்தையை மகன் 32 முறை கத்தியால் குத்திக் கொலை செய்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கன்னதந்திரி மொஹிலி (45) என்பவரை மகன் சாய்குமார், கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் துடிதுடித்து பலியானார்.
இதையடுத்து சாய்குமாரை கைது செய்து போலீஸ் விசாரித்ததில், தினமும் குடித்துவிட்டு வந்து குடும்பத்தினரை துன்புறுத்தியதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




