--- --:--:-- --

ஃபாஸ்டேக் புதிய விதிகள் இன்று முதல் அமல்..!

1

நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கான ஃபாஸ்டேக் நடைமுறையில் புதிய விதிகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.சுங்கச்சாவடிகளில் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க இணையவழி பணப் பரிவர்த்தனை முறையாக ஃபாஸ்டேக் உருவாக்கப்பட்டது.

 

இதற்கு முன்பு, ஃபாஸ்டேக் கணக்கில் போதுமான தொகை இல்லாவிட்டால், சுங்கச்சாவடியில் ரீசார்ஜ் செய்யும் வசதி இருந்த நிலையில், இனி அவ்வாறு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.புதிய விதிகளின் படி, சுங்கச்சாவடியைக் கடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஃபாஸ்டேக் செயலற்ற நிலையில் இருந்தாலோ, அல்லது ஃபாஸ்டேக்கில் பேலன்ஸ் குறைவாக இருந்தாலோ, சுங்கச்சாவடியில் செலுத்திய கட்டணம் நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

போதுமான பேலன்ஸ் இல்லாமல் இருப்பது, KYC செயல்முறையை முடிக்காமல் இருப்பது மற்றும் சரிபார்ப்பு செயல்முறை நிலுவையில் இருப்பது, வாகனப் பதிவு விவரங்களில் முரண்பாடு ஆகிய காரணங்களால் ஃபாஸ்டேக் பிளாக்லிஸ்ட் செய்யப்படுகிறது.

 

எனவே, வாகன ஓட்டிகள் பயணம் செய்வதற்கு முன்பாக ஃபாஸ்டேக் பிளாக்லிஸ்ட் செய்யப்படாமல் இருப்பதையும், போதுமான பேலன்ஸ் இருப்பதை உறுதிசெய்து கொள்வது அவசியமாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon