பைக்கிலேயே விட்டு சென்ற 4 வயது குழந்தை மரணம்..!
சென்னை சைதாப்பேட்டையில் தாத்தா ஸ்டாட் செய்து வைத்திருந்த ஸ்கூட்டரின் ஆக்சிலேட்டரை தவறுதலாக திருகிய நான்கு வயது குழந்தை நிஹாரிகா பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
குழந்தையை ஸ்கூட்டரில் விட்டுவிட்டு தாத்தா அருகில் இருந்த கடைக்கு சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது. இதில் வாகனத்தில் இருந்து கீழே விழுந்த குழந்தையின் தலையில் பலத்த அடிபட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





