--- --:--:-- --

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகுகிறேன் – நடிகை வினோதினி அறிவிப்பு

4

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து வெளியேறுவதாக நடிகை வினோதினி அறிவித்துள்ளார். மேலும் இதற்கான காரணத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வினோதினி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “அரசியல் பெரிய கடல். அதில் முத்தெடுத்து, மக்களுக்குச் சேர்க்க, தனிப்பட்ட நபரால் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்ய தேவை – எண்ணம், சிந்தனை, செயல், பணம். என்னிடம் எண்ணமும் சிந்தனையும் மட்டுமே உள்ளது என்பதைக் காலம் புரியவைத்திருக்கிறது.

 

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் செயலும் பணமும் எனது சொந்த வாழ்க்கைத் தரத்தை ஓரளவு முன்னேற்றுவதற்கும், நான் மேற்கொண்டுள்ள தெருவிலங்குகளின் (நாய், பூனை, ஒரு கோஷாலாவில் என் செலவில் வாழும் சில மாடுகள்) வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்குமே சென்றிருக்கிறது.ஹிந்தியில் ஒரு வார்த்தை இருக்கிறது. அதை நான் சொல்லிப் பல பேரைத் திட்டியிருக்கிறேன்.

 

‘காம்சோர்’ என்பதுதான் அந்த வார்த்தை. ஆங்கிலத்தில் சொன்னால் ‘Slacker’. கடமைகளைத் தட்டிக்கழிக்கும் சோம்பேறி. மய்யத்தில் நான் செய்தது ‘காம்சோர்’. இதை ஒத்துக்கொள்வதில் தவறில்லை என்றும் இந்த உண்மையை வெளிப்படுத்துவதன்மூலம் எனக்கு மிகப்பெரிய சுதந்திரம் கிடைக்கிறது என்றும் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon