ஆதவ் அர்ஜூனாவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தில் முக்கிய பொறுப்பு?
விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனாவிற்கு, தமிழக வெற்றிக் கழகத்தில், துணை அல்லது இணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளராக இருந்த, ஆதவ் அர்ஜூனா அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகினார்.
இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில், நடிகர் விஜயை ஆதவ் அர்ஜூனா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில், ஆதவ் அர்ஜூனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாகவும், அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், ஆதவ் அர்ஜூனாவின் தனியார் நிறுவனம், தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியாக செயல்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.தேர்தல் வியூகங்களை வகுப்பதில், ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து ஆதவ் அர்ஜூனா செயல்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




