பின்பக்கமாக சரிந்து விழுந்த திமுக பிரமுகரின் வீடு..!
கோவை சிவானந்தா காலனியில் ஓடையை ஒட்டி இருந்த திமுக பிரமுகரான சுரேஷ் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. ஓடையை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மண்ணரிப்பு காரணமாக வீடு இடிந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சுரேஷ் குடும்பத்தினர் வெளியே சென்றதாக கூறப்படும் நிலையில் வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





