“என்னோட கள அரசியல் பயணம் பரந்தூரில் தொடங்குகிறது” – விஜய்

“என்னோட கள அரசியல் பயணம் உங்களின் ஆசிர்வாதத்தோடு இங்கிருந்து தான் தொடங்குகிறது.” என்று பரந்தூர் விவசாயிகள் முன்னிலையில் தவெக தலைவர் விஜய் பேசினார்.

 

சென்னையின் 2 ஆவது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைகிறது. இதற்காக பரந்தூர், தண்டலம், மகாதேவி, நாகப்பட்டு, நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்து 100 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் கையகப்படுத்தப்பட உள்ளதால், அந்த கிராமத்தை மையமாக வைத்து 900 நாட்களுக்கு மேலாக மக்கள் போராடி வருகின்றனர்.

 

இவர்களது போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், தவெக தலைவரும், நடிகருமான விஜய் பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவினரை இன்று சந்தித்து வருகிறார். பரந்தூரில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.