பைக்கில் சென்ற தம்பதியை துரத்திய யானை..!

கேரளாவின் வயநாட்டில் குழந்தையுடன் பைக்கில் சென்ற தம்பதியை காட்டு யானை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் யானைகள் அதிகமுள்ளதால் அவை மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

 

இந்நிலையில், திருநெல்லி பகுதியில் குழந்தையுடன் பைக்கில் சென்ற தம்பதியை காட்டு யானை துரத்தியது. நல்வாய்ப்பாக அவர்கள் யானையிடம் சிக்காமல் தப்பி சென்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.