ஈரான் சுப்ரீம் கோர்ட்டில் 2 நீதிபதிகள் சுட்டுக்கொலை..!

ரானின் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 நீதிபதிகள் பலியாகினர். உயிரிழந்த நீதிபதிகளான அல் ரசினி, அல் மொஜிஸ்சே இருவரும் பாதுகாப்பு, பயங்கரவாதம், உளவு பார்த்தல் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

 

தாக்குதல் நடத்தியவர் மீது இதுவரை எந்த குற்ற வழக்கும் இல்லாததால், காரணம் தெரியாமல் போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.