பாம்பு கடித்த இளைஞர், கர்ப்பிணி பெண்ணை டோலி கட்டி தூக்கி சென்ற அவலம்..!
உடுமலைப்பேட்டை அருகே குறுமலை பகுதியில் சாலை அமைப்பது குறித்து வனத்துறையுடன் சென்று திருப்பூர் ஆய்வு செய்தார். குருமலை, மேல்குருமலை, ஈசன் தட்டு உள்ளிட்ட 16 க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் குருமலையில் பாம்பு கடித்த இளைஞரையும் கர்ப்பிணியையும் சாலையும் சரி இல்லாததால் சிகிச்சைக்கு டோலி கட்டி தூக்கி சென்ற காட்சிகள் வெளியான நிலையில் அந்த பகுதியில் சாலை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





