--- --:--:-- --

போக்சோ வழக்கில் பாஜகவின் மாநில பொருளாதார பிரிவு தலைவர் கைது..!

2

மதுரையில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் பாஜகவின் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

திருமங்கலம் பகுதியில் பிரபலமான தனியார் கல்லூரியின் தலைவராக எம்.எஸ்.ஷா இருந்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 15 வயது சிறுமியின் தந்தை எம்.எஸ்.ஷா மீது புகார் அளித்துள்ளார். அதில் தனது மகளுக்கு எம். எஸ்.ஷா பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக புகார் தெரிவித்திருக்கிறார்.

 

இந்த புகாரின் அடிப்படையில் எம்.எஸ்.ஷா மற்றும் சிறுமியின் தாய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால் காவல்துறை தேவையான நடவடிக்கை எடுக்கலாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon