--- --:--:-- --

குடியரசு தின அணிவகுப்பு..10,000 சிறப்பு விருந்தினருக்கு அழைப்பு..!

10

குடியரசு தின அணிவகுப்பை காண பாரா ஒலிம்பிக் வீரர்கள் மற்றும் கைத்தறி கைவினைகஞர்ள் உட்பட பத்தாயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. குடியரசு தின விழா அணிவகுப்புக்கான பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் மத்திய அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய சுமார் 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

 

இதில் பாராலிம்பிக் வீரர்கள் சிறந்த செயல் திறன் கொண்ட கிராம ஊராட்சி தலைவர்கள் கைத்தறி கைவினைஞர்கள் வனவிலங்கு பாதுகாப்பு பணியாளர்கள் பேரிடர் நிவாரண பணியாளர்கள் சிறப்பாக செயல்படும் நீர்வள பாதுகாவலர்கள் வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் சிறந்த காப்புரிமை வைத்திருப்பவர்கள் சிறப்பு புத்தாக்கு உரிமை வைத்திருப்பவர்கள் மற்றும் சாலை கட்டுமான தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

போட்டியில் பதக்கம் வென்றவர்கள் போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றவர்கள் மற்றும் உலக சாம்பியன்ஷி போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் குடியரசு தின விழாவில் பங்கேற்பது மட்டும் இல்லாமல் தேசிய போர் நினைவிடம் போன்ற இடங்களுக்கும் அழைத்து செல்லப்படுவர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon