தன் பாலின திருமண தீர்ப்பு..மறு ஆய்வு செய்ய மறுப்பு..!
தன் பாலின திருமணத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் தன் பாலின திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரிக்க மறுத்து உத்தரவு பிறப்பித்தது.
அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனுக்களை 5 பேர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்பொழுது முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





