ஆட்சியர் சென்ற கார் மீது மோதிய ரவுடியின் கார்..!
மதுரை மாவட்ட ஆட்சியர் சென்ற கார் மீது ரவுடி கார் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலூர் பகுதியில் தனுஷின் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் கிராம மக்களை மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு முடிந்து காரில் அலுவலகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவரது கார் உயர்நீதிமன்ற மதுரை கிளை அருகே வந்து கொண்டு இருந்த பொழுது பின்னால் வேகமாக வந்த மற்றொரு கார் ஆட்சியரின் கார் மீது மோதியது. இது ஆட்சியரின் காரின் பின் பகுதியில் கீறல் ஏற்பட்டது.
காரை ஓட்டி வந்தது பிரபல ரவுடியின் மகன் வரிச்சூர் செல்வத்தின் மகன் நலன்குமார் என்பது விசாரணையில் தெரியவந்தது. மாவட்ட ஆட்சியரின் கார் மீது மோதிய வரிச்சூர் செல்வம் மகனின் காரை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





