விமானப் பயணியின் பையில் இருந்த முதலையின் தலை..!
முதலையின் மண்டை ஓட்டை மறைத்து கடத்திக் கொண்டு வந்த வெளிநாட்டுப் பயணி டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
தாய்லாந்தில் இருந்து டெல்லிக்கு வந்த விமான பயணிகளின் உரிமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த பொழுது ஒரு பயணியின் பையில் இருந்து முதலை மண்டை ஓடு பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து நடத்திய விசாரணையில் முதலில் மண்டை ஓட்டை மறைத்து வந்த கன்னட நாட்டு நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முதலை மண்டை ஓட்டை தாய்லாந்தில் இருந்து வாங்கி வந்ததாக தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





